
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேளாங்கண்ணி ஆலயத்தில் நாளை பிரார்த்தனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய், திருச்செந்தூர் மற்றும் ஷீரடி ஆகிய இடங்களுக்குச் சென்று தீவிர வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, அவர் வேளாங்கண்ணி ஆலயம் மற்றும் நாகூர் தர்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, அவர் நாளை காலை 5 மணி அளவில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை செய்கிறார். மேலும், நாகூர் தர்காவில் நடைபெற உள்ள சிறப்பு வழிபாட்டிலும் பங்கேற்க உள்ளார். சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் விஜயின் செயல்கள் இருப்பதால் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



