
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் 85 % வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதுவரை தமிழ்நாட்டில் இந்தளவிற்கு வாக்குப்பதிவு நடந்ததே இல்லை, இதெல்லாம் மிகப்பெரிய வரலாறு என சொல்கின்றனர் சிலர். ஆனால் சிலரோ, வாக்குசதவீதம் தான் அதிகம், ஆனால் வாக்கு செலுத்தியவர்கள் குறைவு என்கின்றனர் சிலர். SIR மூலம் பல வாக்குகள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. அதன் காரணமாக வாக்குப்பதிவு அதிகமாக தெரிகின்றது என்கின்றனர் சிலர்.
இப்படி தேர்தல் வாக்குப்பதிவு குறித்து விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் தான் தவெக தலைவர் விஜய் ஒரு பதிவின் மூலம் தன் நன்றியினை மக்களுக்கு தெரிவித்து இருக்கின்றார். அதாவது 85 % வாக்குப்பதிவு என்பது இதுவரை தமிழ்நாடு கண்டிராத ஒன்று, அதற்காக தமிழ்நாடு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவிப்பதாக விஜய் பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவியில் மேலும் அவர் குறிப்பிட்டவாறு, அரசியல் என்பது அசகாய சூரர்களுக்கு, அதீத அனுபவசாலிகளுக்கு பதவிகளை அனுபவிப்பதற்கானது மட்டுமே என கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். இதுபோன்ற மாயாஜால கணக்குகளை எல்லாம் மக்கள் தற்போது உடைத்தெறிந்து இருக்கின்றனர். இளைஞர்களும் பெண்களும் அரசியலை கண்டுகொள்ளவே மாட்டார்கள் என கூறி வந்த நிலையில் தற்போது இளைஞர்களும் பெண்களையும் அரசியல் பேச துவங்கியிருக்கின்றனர்.
வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பலர் செலவு செய்து வாக்களித்து சென்றுள்ளார்கள். அவர்களை எல்லாம் என் இருகரம் கூப்பி வணங்குகின்றேன். தேர்தல் திருவிழா ஜனநாயக திருவிழாவானது நேற்று தான். ஆனாலும் இது வெறும் துவக்கம் மட்டும் தான். இதையெல்லாம் சாத்தியமாக்கிய அனைவருக்கும் எனது நன்றிகள். குறிப்பாக நம் குடும்பத்தினரை வழிநடத்திய குட்டி நண்பா நண்பீஸ்க்கு உங்கள் விஜய்மாமாவின் ஸ்பெஷல் வணக்கம்.
குறிப்பாக நான் வாக்குச்சாவடி முகவர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் ,அனைத்து நிர்வாகிகளுக்கும் என் நன்றியினை தெரிவிக்க வேண்டும்.கழக தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கு எனது நன்றிகள்.நம்பிக்கையுடன் இருப்போம் ,நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என விஜய் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..



