
அண்ணல் நபி கட்டித் தழுவிய தோழர்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சமயம் கடைவீதிக்குச் சென்றார்கள் அங்கே ஜாஹிரா ரலியல்லாஹு அன்ஹு என்ற தோழரை பார்த்தார்கள். அவரைப் பின்பக்கமாக வந்து தம் நெஞ்சோடு சேர்த்து இறுகி கட்டிக் கொண்டார்கள் அவர்களின் பிடியிலிருந்து அவர்களால் விடுபடவில்லை அண்ணல் நபி அவர்களோ அவரை நன்றாக பற்றிப் பிடித்துக் கொண்டு யாரேனும் இந்த அடிமையை விலைக்கு வாங்குபவர் உண்டா என்று அக்கடை தெருவில் சப்தமிட்டு ஏலம் விடத் தொடங்கினார்கள் மக்கள் கூட்டம் சேர்ந்து கொண்டது நம் பின்னால் நம்மை கட்டிப்பிடித்து இருப்பது அண்ணல் நபி அவர்கள் தான் என்று அந்த நபித்தோழர் அறிந்து கொண்டார்.
அல்லாஹ்வுடைய அன்பிற்குரிய அண்ணலார் தம்மை பின்னால் பற்றி கொண்டு நெஞ்சோடு அணைத்து இருப்பது எண்ணி அச்சத்தாலும் ஆனந்தத்தாலும் மகிழ்ச்சியாலும் அவரின் கண்களில் கண்ணீர் வடிந்தது அல்லாஹ்வின் தூதரே நான் விலை போகக்கூடிய பொருள் அல்ல என்னை விற்றால் தங்களுக்கு பலன் இருக்காது நான் விலையில்லா பொருள் மதிப்பில்லா பொருள் என்று கூறினார் ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருடைய உயர்வை அறிந்து மக்களிடம் நீர் மதிப்பில்லாமல் இருக்கலாம்.
ஆனால் உன்னை படைத்த அல்லாஹ்விடம் உயர்ந்து நிற்கின்றாய் என்று கூறினார்கள் அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளாய் என்று கூறிய அண்ணல் நபி அவர்கள் ஜாஹிரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது வைத்திருந்த அன்பை பாருங்கள். அடிமையாக உள்ள அவர் மக்களால் ஒதுக்கப்பட்டவர் சந்தையில் கால்நடைகள் ஏலம் விடுவது போன்று ஏலம் விடப்படுபவர் அத்தனை உரிமையும் மறுக்கப்பட்டவர் அப்படிப்பட்டவருக்கு அண்ணல் நபி அவர்கள் வழங்கிய வார்த்தையும் வாழ்த்துறையும் எவ்வளவு உயர்வானது

