Advertisements

கேரள இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் விளம்பர வீடியோவில், கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் நடிகர் மோகன்லால் நடித்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கேரள கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் கேரள இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்டு சர்வதேச மைதானத்தில் நாளை மிக பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சஞ்சு சாம்சன் மற்றும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் இணைந்து நடித்துள்ள விளம்பர வீடியோ தற்போது இணைய தளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
இந்த வீடியோவில் சஞ்சு சாம்சன் காரை ஓட்ட, மோகன்லால் அருகில் அமர்ந்து உரையாடுவது போன்ற சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் வீடியோ மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
Advertisements




