Yuan Wang 5: தமிழ்நாட்டை உளவு பார்க்கும் கப்பல்!

Advertisements

தமிழ்நாட்டை உணவு பார்ப்பதற்காகச் சீனாவிலிருந்து ஒரு கப்பல் வெகுவிரைவிலேயே இலங்கைக்கு வரப்போவதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது…

சீனாவிலிருந்து ஷி யான் ஆறு என்ற உளவு கப்பல் இலங்கையில் உள்ள கொழும்பு மற்றும் அம்மாந்தோட்டை ஆகிய துறைமுகங்களுக்கு வரவிருப்பதாகவும் 17 நாட்கள் அங்கிருந்து ஆராய்ச்சியில் ஈடுபட போவதாகவும் கிடைத்துள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன

சீன உளவு கப்பலின் ஆராய்ச்சி என்பது தென் மாநிலங்களை உலவு பார்ப்பது தான் என்பதால் இது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது

இந்தக் கப்பல் வருகிற அக்டோபர் மாதம் இலங்கை துறை முகத்துக்கு வந்து சேரும் என்று தெரிகிறது.
முன்னதாகச் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அல்லது 2 5ஆம் தேதியே வந்து விடலாம் என்றும் தெரிகிறது

இந்தக் கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு இன்னமும் அனுமதி தரப்படவில்லை அதே நேரத்தில் இது தொடர்பான ஆய்வில் இலங்கை அரசு இருப்பதாகவும்க்ஷ அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்திய அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தான் இலங்கை அரசு சீன கப்பலுக்கு அனுமதி அளிக்காதது போல நடிக்கிறது உண்மையில் இலங்கை அரசு கடைசி நேரத்தில் சீன உளவு கப்பலுக்குக் கண்டிப்பாக அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது அவ்வாறு அனுமதி தரப்பட்டால் அது இந்தியாவுக்கு குறிப்பாகத் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்

ஷி யான் உளவுக் கப்பல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். பல நூறு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் இந்தக் கப்பலுக்கு உண்டு இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டாலும் அம்மாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டாலும் அங்கிருந்து தமிழகத்தில் உள்ள கூடங்குளம் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையங்களை மற்றும் சென்னை தூத்துக்குடியில் உள்ள தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் எளிதில் உணவு பார்த்து அதுகுறித்த தகவல்களைச் சேகரித்து விட முடியும்

அணுசக்தி ஆராய்ச்சி நிலையங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் எத்தகைய தொடர்பு கொண்டவை என்பதை அறிந்தவர்களால் இந்தக் கப்பலால் எத்தகைய ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்

இதற்கு முன்னதாகவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் இதே போல் சீனாவுக்கு சொந்தமான ஒரு கப்பல் உளவு பார்ப்பதற்காக இலங்கைக்கு வந்தது ஆனால் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அது திருப்பி அனுப்பப்பட்டது தற்போது வரும் சீ யான் கப்பல் அதைவிட மோசமானது அது மட்டுமல்ல 17 நாட்கள் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்யும்பொழுது அவர்கள் முழுமையான தகவல்களையும் சேகரித்துக் கொண்டு சென்று விடுவார்கள் இதன் பின்னர் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு எதிராகச் சீனா செயல்பட்ட தொடங்கும் எனவே அந்தக் கப்பலை இலங்கைக்கு வர அனுமதிக்க கூடாது

இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு இந்தியா எச்சரிக்கை விடுக்க வேண்டும் ஒருவேளை இலங்கை அரசு அதை ஏற்காவிட்டால் இலங்கைக்கு மிகக் கடுமையான பாடத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *