முதலமைச்சருக்கு எதிராகப் பேசிய திமுக எம்.எல்.ஏ கைது – கோவில்பட்டியில் பரபரப்பு!

Advertisements

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசினார். இதன், வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை இன்று காலை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி காவல்துறையினர் வாகனத்தை மறித்தனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *