WhatsApp: ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை!

Advertisements

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை!

வேலூரில் திருமணமாகத விரக்தியில் இளைஞர் ஒருவர் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவா அமிர்தா தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் சரத்குமார் (வயது 26). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் 26 வயதான சரத்குமாருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு திருமணம் செய்து வைக்கக் வேண்டி பெற்றோரிடம் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சென்ற சரத்குமார் வீடு திரும்பாத நிலையில் தனது தங்கைக்கு போன் செய்து நான் இறக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய whatsapp ஸ்டேட்டஸில் நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறக்கப் போவதாக ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதனை அடுத்து காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சரத்குமாரின் இருசக்கர வாகனமும், கிணற்றில் சரத்குமார் சடலமாகவும் கண்டெடுக்கப்பட்டுள்ளார். காட்பாடி தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடலை மீட்ட விருதம்பட்டு காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *