POCSO Act: சிறுமியை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை!

Advertisements

சிறுமியை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை!

விழுப்புரம்: சிறுவந்தாடு அருகே எட்டாம் வகுப்பு மாணவியைக் கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை விழுப்புரம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த எட்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி அதே பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுவனைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை நேரத்தில் எட்டாம் வகுப்பு மாணவியைச் சிறுவன் கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது கரும்பு தோட்டத்திற்கு வந்த மணிகண்டன் என்ற இளைஞர் சிறுவனைக் கரும்பால் அடித்துவிட்டு பள்ளி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பரசுரெட்டிப்பாளையத்தை சார்ந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் சிறுமியை மிரட்டிப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதிப்படுத்தபட்டது. இதனையடுத்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் சிறுவனை அடித்துவிட்டு பள்ளி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளபோது அந்தச் சிறுமி “வேண்டாம் என்னை விட்டு விடுங்கள்” எனவும் “அம்மா என்ன தேடுவாங்க” எனக் கதறி அழும் சிறுமியின் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *