Yogi Babu: வெளியானது ‘Lucky Man’ ட்ரெய்லர்!

Advertisements

Yogi Babu | Lucky Man 2023 | Trailer

‘மண்டேலா’, ‘பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களின் வரிசையில் யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் ‘லக்கி மேன்’. பாலாஜி வேணுகோபால் இயக்கும் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

யோகிபாபு உடன் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (ஆக. 19) வெளியிட்டுள்ளது.

வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையே பார்க்காத ஒரு மனிதனுக்கு பெரும் அதிர்ஷ்டம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பது ட்ரெய்லரில் சுருக்கமாகக் காட்டப்படுகிறது. ஏழ்மையான நிலையில் இருக்கும் யோகிபாபுவுக்கு ஒரு பெரிய வேலையின் மூலம் வசதிகள் கிடைக்கின்றன. கூடவே சில பிரச்சினைகளும் அவருக்கு முளைக்கின்றன. இதனால் அவர் குடும்பத்திலும், வெளியிலும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ட்ரெய்லரில் நமக்குக் காட்டப்படுகிறது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *