Yoga Teacher: ரம்யா பாண்டியன்!

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாகக் கலக்கிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன், தற்போது யோகா டீச்சராக மாறி இருக்கிறார்.

தமிழில் டம்மி டப்பாசு, ஜோக்கர், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இதுதவிர குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தி இருந்தார் ரம்யா. தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் ரம்யா பாண்டியன், சைடு கேப்பில் யோகா டீச்சராகவும் மாறி இருக்கிறார்.

ரிஷிகேஷில் உள்ள சுமாரி ஸ்ரீ ஸ்ரீக்கு சொந்தமான ஆசிரமத்தில் 21 நாட்கள் யோகா பயிற்சி வகுப்பை முடித்து, யோகா டீச்சர் ஆகும் தகுதி உடையவர் என்கிற சான்றிதழையும் பெற்றுள்ளார் ரம்யா பாண்டியன். இதனால் இனி தான் ஆக்டர் மட்டுமில்லை யோகா டீச்சர் என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவுமூலம் அறிவித்து உள்ளார் ரம்யா பாண்டியன்.

இந்த 21 நாள் பயணம்குறித்து அவர் போட்டுள்ள பதிவில், தெய்வ பூமி என்று அழைக்கப்படும் ரிஷிகேஷ், 21 மறக்க முடியாத நாட்களை என் இதயத்தில் பதித்துள்ளது. கங்கையின் வழியே அமைதியான நடைப்பயணத்துடன் என் காலைப் பொழுது தொடங்கும். செல்லும் வழியில் கங்கையிடம் இதயப்பூர்வமான பிரார்த்தனைகளைச் செய்தபடியே ஆசிரமத்திற்கு அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் செல்வேன்.

ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக்கொண்டேன். அதோடு, ஊட்டமளிக்கும் சாத்விக் உணவுகளையும், மயக்கும் கங்கா ஆரத்தியென இயற்கையுடன் அமைதியாகக் கடந்து சென்றது, மேலும் கங்கை நீரின் நிலையான ஒலி ஒரு தியான பின்னணியை வழங்கியது. ரிஷிகேஷ், என் இதயத்துக்கு நெருக்கமாகிவிட்டது. பாசிடிவிட்டி மற்றும் அமைதியை அதிகம் தரும் இந்த இடத்திற்கு விரைவில் திரும்ப வருவேன்” எனப் பதிவிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் எப்போ யோகா கிளாஸ் ஸ்டார்ட் பண்ண போறீங்க எனக் கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *