
Trisha Krishnan
துபாயில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் மாதவன், நடிகையைத் திரிஷா மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விருதுகளை வென்றனர்…
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் திரைப்படம் மொத்தம் 5 விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ரவி வர்மனுக்கு வழங்கப்பட்டது.

குறிப்பாக இந்தத் திரைப்படத்தில் குந்தவையாகவே வாழ்ந்த நடிகை திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான சைமா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களிலும் மிக நேர்த்தியாக நடித்திருந்தார் திரிஷா.
இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, மணிரத்தினம் குறித்தும், பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்தும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் நடிகை திரிஷா. விரைவில் அவருடைய லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




