ஜார்கண்ட்டில், நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்ட வீரர் பணியின் போது வீர மரணமடைந்தார்.
ஜார்கண்ட் மற்றும் அண்டை மாநிலங்களில் ஒன்றான சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
அதனை கட்டுப்படுத்து மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஜார்கண்டில் நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்ட வீரர் சுனில் தான் என்பவர் பணியின்போது, வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து, சுனில் தானின் குடும்பத்தினரை, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த கூட்டத்தில் காவல் துறையினர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக .1.2 கோடி ரூபாய் வழங்கினார்.

