ஏமனில் சவுதி அரேபியா நடத்திய வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
ஏமனில் அரசுப் படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. அதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏமனின் ஹுடாடே மாகாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவன நிர்வாக அலுவலம் மீது சவுதி அரேபியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயமடைந்தனர். மேலும், தொலைத்தொடர்பு நிறுவனக் கட்டமைப்பு முழுவதும் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


