லக்னோவில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேசம் தலைநகரமான லக்னோவில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, மலேசியாவின் ஜோ ஜின் வெய் உடன் மோதினார். இதில், சிறப்பாக விளையாடிய மலேசியாவின் ஜோ ஜின் வெய், முதல் செட்டில் 2-1 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அதன் அடிப்படையில் இந்தியாவின் தன்வி ஷர்மா வெற்றி பெற்றார். இதன்மூலம், அவர் இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.

