மிரட்டல், உருட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆட்சி இது கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபுப்படியும், தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றியும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதாகத் தெரிவித்தார். சில கூட்டம் தீபம் ஏற்ற விடாமல் கலகம் செய்வதற்காகத் திருநெல்வேலியிலிருந்து வேனிலும், சென்னையிலிருந்து விமானத்திலும் என 300-க்கும் மேற்பட்டோர் வந்ததாகக் குற்றம்சாட்டினார். ஆனால் அவர்களுடைய கனவும், சதித்திட்டங்களும் தவிடுபொடியாகி விட்டதாக கூறினார். அதற்காகப் பின்விளைவுகள் வரும், முன்விளைவுகள் வரும் என்று சொல்லிப் பயமுறுத்துவதற்கெல்லாம் பயப்படும் காலம் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் இது பழனிசாமி ஆட்சி கிடையாது என்றும் இது மதச்சார்பற்ற, சமூக நீதி வெற்றிக் கூட்டத்தினுடைய ஆட்சி என்றும் தெரிவித்தார். மேலும் இந்த மிரட்டல், உருட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆட்சி இது கிடையாது என்று கூறினார். அண்ணாமலையை பொறுத்த வரை அவர் ஒரு டம்மி பீஸ் என்று விமர்சித்தார். மேலும் அவரைப் பற்றிப் பேசுவது வெட்டி வேலை என்றும், முதலில் ஒரு தேர்தலில் ஜெயிக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.

