இந்து மதத்தினரின் மக்கள் தொகை குறைந்தது எதனால் ..? – யோகி ஆதித்யநாத்

இந்தியா மீது படையெடுத்தவர்களால் இந்து மதத்தினரின் மக்கள் தொகை குறைந்தது என்று லக்னோவில் நடைபெற்ற கருத்தரங்கில், உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி-ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தன்னிறைவு இந்தியா மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பாக, நாடு தழுவிய அளவில், பா.ஜ.க. சார்பில், கருத்தரங்கு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் லக்னோவில் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

இதில் பா.ஜ.க. மூத்த தலைவரும், உத்திரபிரதேச முதலமைச்சருமான யோகி-ஆதித்யநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, கி.பி. ஆயிரத்து 100-ஆம் ஆண்டுவாக்கில், இஸ்லாம், இந்தியாவை தாக்கியபோது. இந்து மதத்தினரின் மக்கள் தொகை 60 கோடியாக இருந்தது.

ஆனால், 1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றபோது இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்தது என்றும், 900 ஆண்டுகளில் இந்து மதத்தினரின் மக்கள் தொகை உயர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், 60 கோடியில் இருந்த மக்கள் தொகை 30 கோடியாக சரிந்துள்ளது என்றும், இந்து மதத்தினரின் மக்கள் தொகை, இந்தியா மீது படையெடுத்தவர்களின் அட்டூழியங்களால் குறைந்தது என்றும், அதுமட்டுமின்றி வறுமை, நோய், பிற சித்ரவதைகளால், இந்து மதத்தினரின் மக்கள் தொகை குறைந்தது எனவும், அந்நிய அடிமைத்தனம் இதைத்தான் செய்தது, அதுதான் இந்த நாட்டில் நடந்தது எனவும்,யோகி-ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *