எகிப்தில் கோர விபத்து – 30 பேர் உடல் கருகி பலி!

எகிப்து தலைநகரமான கெய்ரோவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில், 30 பேர் உயிரிழந்தனர்.
எகிப்து தலைநகரமான கெய்ரோவின், அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட நெடுஞ்சாலைப் பகுதியில் எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி மக்கள் நடமாட்டம் மிகுந்தப் பகுதியைக் கடக்கும்போது, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரி கவிழ்ந்த வேகத்தில் அதிலிருந்த எரிபொருள் சாலையில் வழிந்தோடி, கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரத் தீப்பிடித்தது. மக்கள் நெருக்கடி மிகுந்தப் பகுதி என்பதால், தீ மளமளவென பரவி அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *