Yemen: நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை..! என்ன செய்ய போகிறது இந்தியா?

Advertisements
ஏமன் நாட்டில் செவிலியராக வேலைக்குச் சென்ற நிமிஷா பிரியா கடந்த 7 ஆண்டுகளாகவே கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை காப்பாற்றப் பல்வேறு பேச்சுவார்த்தைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், இப்போது அவருக்கு அடுத்த வாரம், அதாவது ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. யார் இந்த நிமிஷா பிரியா ,  எதற்காக ஏமன் சென்றார். அங்கு அவருக்கு என்ன நடந்தது.. அதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

ஏமன் நாட்டிற்குச் சென்ற நிமிஷா பிரியாவுக்கு கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரை வெளியே கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அது தோல்வியிலேயே முடிந்தது. இந்தச் சூழலில் தான் அவருக்கு ஜூலை 16ம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஏமனில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஏமன் நாட்டில் பணிபுரிந்து வந்தார்.
இதையடுத்து அவரது கணவர் மற்றும் மகள் 2014ஆம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினர்.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில், இதனால் அவர் பொருளாதார நெருக்கடியை அதிகம் எதிர்கொள்ள ஆரம்பித்தார். இந்தச் சூழலில் தான் அவர் சொந்தமாக ஒரு கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.ஆனால், ஏமன் நாட்டுச் சட்டப்படி வெளிநாட்டினர் சொந்தமாக பிஸ்னஸ் தொடங்க முடியாது. அதாவது நிமிஷா பிரியாவால் சொந்தமாக கிளினிக் தொடங்க முடியாது. இதன் காரணமாக அவர் மஹ்தி என்பவரை அணுகியுள்ளார். மஹ்தி ஏமன் நாட்டுக் குடிமகன்.. இதனால் இருவரும் சேர்ந்து கிளினிக்கைத் தொடங்க முடிவு செய்தனர். அதன்படியே கிளினிக்கை ஆரம்பித்துள்ளனர். தொடக்கத்தில் சில காலம் எல்லாமே நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது.

ஆனால், சில காலத்தில் நிமிஷாவை மிரட்ட ஆரம்பித்த மஹ்தி, கிளினிக் வருமானம் முழுவதையும் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, நிமிஷாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து, இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாகச் சொல்லி மற்றவர்களை ஏமாற்றியுள்ளார். இருவருக்கும் கல்யாணம் நடந்துவிட்டதால் கிளினிக் வருமானம் தனக்கே சொந்தம் என்றும் மஹ்தி கூறியிருக்கிறார். இதனால் நிமிஷா யாரிடம் புகார் சொன்னாலும் அதுவும் எடுபடவில்லை.

ஒரு கட்டத்தில் நிமிஷாவின் பாஸ்போர்ட்டையும் அவர் பிடுங்கி  வைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் நிமிஷா போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அப்போது மஹ்தி சில காலம் மட்டுமே கைது செய்யப்பட்டார். பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது ஜெயில் வார்டன் ஒருவர் அளித்த ஆலோசனையின்படியே, மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை எடுக்க நிமிஷா முயற்சி செய்துள்ளார்.

அப்போது மஹ்திக்கு அளித்த மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதில் மஹ்தி என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பான கொலை குற்றச்சாட்டில்தான் நர்சு நிமிஷா சிக்கினார். கிளினிக் ஒன்று ஆரம்பித்ததில் ஏற்பட்ட பிரச்சினையையடுத்து தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து கைப்பற்றுவதற்காக மயக்க மருந்து கொடுத்துள்ளார். ஆனால் இந்த மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதால் மஹ்தி உயிரிழந்துவிடவே, கொலை குற்றச்சாட்டில் நிமிஷா சிக்கினார் . இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *