விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் திவ்யன்ஷா!

ஐதராபாத்: பரசுராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. இதில் அவர் ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். தில் ராஜூவின் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இதன் படப்பிடிப்பும் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் இன்னொரு ஹீரோயினாக திவ்யன்ஷா கவுசிக் ஒப்பந்தமாகி உள்ளார். இவர், ‘மஜிலி’, ‘மைக்கேல்’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் சமீபத்தில் வெளியான ‘டக்கர்’ படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார். இது பற்றி திவ்யன்ஷா கூறும்போது, ‘பல படங்களில் நடித்தபோதும், எனக்கான தனி இடம் சினிமா துறையில் இதுவரை பெறவில்லை. இப்போதுதான் அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. விஜய் தேவரகொண்டா படத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் கிடைத்திருக்கிறது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *