Yashika Aannand:படக்குனு பாவாடை தாவணிக்கு மாறிட்டாங்க – ட்ரெடிஷனல் உடையில் கலக்கல்!

Advertisements

Yashika Aannand : புதுடெல்லியில் பிறந்து, கோலிவுட் திரைப்படங்களில் மட்டுமே நடித்துப் புகழ்பெற்ற நடிகை தான் யாஷிகா ஆனந்த், அவருக்கு வயது 24.

தனது 17வது வயது முதல் கலைத்துறையில் பயணித்து வரும் யாஷிகா ஆனந்த், கடந்த 2016ம் ஆண்டு வெளியான “கவலை வேண்டாம்” என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

தொடர்ச்சியாகக் கோலிவுட் உலகில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று மட்டுமே யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார். இன்றளவும் அவருடைய நடிப்பை எடுத்துரைக்கும் அளவிற்கு கனமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை என்றே விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இறுதியாகத் தமிழில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான இயக்குனர் செல்வத்தின் “படிக்காத பக்கங்கள்” என்கின்ற திரைப்படத்தில், முன்னணி கதாபாத்திரம் ஏற்று யாஷிகா ஆனந்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாகத் தமிழில் “இவன்தான் உத்தமன்”, “ராஜ பீமா”, “சல்பர்” மற்றும் “சிறுத்தை சிவா” உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை யாஷிகா ஆனந்த் தற்பொழுது நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *