Illegal Relationship: சினிமாவை மிஞ்சும் சம்பவம் செய்த பெண்!

Advertisements

பொன்னேரியில் வேறொருவருடன் உள்ள கள்ளத்தொடர்பை கள்ளக்காதலன் தட்டி கேட்டதால் ஆத்திரமான பெண் கூலிப்படையை வைத்து போட்டு தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரியா. இவருக்கும் லட்சுமணன் என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பாலாஜி நகரை சேர்ந்த கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (27).  திருமணமாகாத இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கணவரை பிரிந்து வாழும் பிரியாவுக்கும் கோபாலகிருஷ்ணணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கோபாலகிருஷ்ணன் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்த நிலையில் பிரியாவுக்கு வேறொரு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த கோபாலகிருஷ்ணன் பிரியாவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  கடந்த சில நாட்களாக இருந்து வந்த தகராறு நேற்று மாலை முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரியா கோபாலகிருஷ்ணணை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதனையடுத்து பிரியா சென்னையில் வசிக்கும் தனது நண்பர் மூலம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலிப்படையை சேர்ந்த 4 பேரை ஏற்பாடு செய்தார். அப்போது பிரியா கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதுடன் உங்களது மகனை ஒரு மணி நேரத்தில் தீர்த்து கட்டிவிடுகிறேன் என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், திருவாய்ப்பாடியில் கோபாலகிருஷ்ணன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது பிரியத தகராறு செய்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த கூலிப்படையினர் கோபாலகிருஷ்னனை தலை, கழுத்து என சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து தப்பித்தனர்.

உடனே இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோபாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது பிரியாவை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த 4 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *