
ஜனவரி 13-ல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் பெய்ஜிங்கிற்கும் தைபேவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்துவதாக உள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளது.
தைவானை சீனா தனது புனித பிரதேசமாக கருதுகிறது. தைவானுடன் சீனாவின் “ஒருங்கிணைப்பு” தவிர்க்க முடியாதது என்று ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தனது புத்தாண்டு உரையில் கூறினார். சீனா உரிமை கோரும் தீவில் ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் கடந்த ஆண்டை விட தற்போது மிக அழுத்தமாக தைவானுடன் ஒன்றிணைவது பற்றி கூறியது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜனவரி 13-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் பெய்ஜிங்கிற்கும் தைபேவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசலை நிச்சயமாக ஏற்படுத்தும் என்று கருதப்படும் நேரத்தில் நடக்கிறது. ஜனநாயக முறையில் நிர்வகிக்கப்படும் தைவான் மீது தனது இறையாண்மை உரிமையை நிலைநாட்ட சீனா தன்னுடைய அதிகப்படியான இராணுவ அழுத்தத்தை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தைவானை தனது “புனிதமான பிரதேசம்” என்று சீனா கருதுகிறது, மேலும் அதை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக தன் பலத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தனது உரையில் இராணுவ அச்சுறுத்தல்கள் குறித்து ஜி ஜின்பிங் எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சின்ஹுவா செய்திகுறிப்பில் தாய்நாட்டின் மறுசீரமைப்பு மற்றூம் பாதுகாப்பு ஒரு வரலாற்று தவிர்க்க முடியாதது” என்று ஜி ஜின்பிங் கூறினார்.
“தைவான் நீரிணையின் இருபுறமும் உள்ள பொது மக்கள் ஒரு பொதுவான நோக்க உணர்வுக்கு கட்டுப்பட்டு, சீன தேசத்தின் மறுமலர்ச்சியின் மகிமையில் பங்கெடுக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் `சக நாட்டவர்கள்” என்பதற்கு பதிலாக “அனைத்து சீனர்கள்” என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நீரிணையின் இருபுறமும் உள்ள மக்கள் “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்” என்றும், “சீன தேசத்தின் நீடித்த செழிப்பை கூட்டாக வளர்ப்பதற்கு” இரு தரப்பிலும் உள்ள மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று நம்புவதாகவும் ஜி ஜின்பிங் கூறினார்.
தைவானின் ஆளும் ஜனநாயகக் கட்சியின் (டிபிபி) ஜனாதிபதி வேட்பாளரும், கருத்துக் கணிப்புகளில் மாறுபட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பவருமான தற்போதைய துணை அதிபர் லாய் சிங்-தே ஒரு ஆபத்தான பிரிவினைவாதி என்று சீனா குறிப்பாக ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேரடி தொலைக்காட்சி ஜனாதிபதி விவாதத்தில் லாய் கூறிய கருத்துக்களுக்கு சனிக்கிழமை பிற்பகுதியில் பதிலளித்த சீனாவின் தைவான் விவகார அலுவலகம், “லாய் “ஒரு பிடிவாதமான ‘தைவான் சுதந்திரத்திற்கான நபர் என்று கூறியது. தைவான் நீரிணை முழுவதும் அமைதியை அழிப்பவர் என்றும் சாடியுள்ளார்.
அவரது க்கடும் வார்த்தைகள் மோதலை உண்டாக்கும் என்று செய்தித் தொடர்பாளர் சென் பின்ஹுவா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சாய் இங்-வென் பதவியேற்ற 2016 முதல் – டிபிபி தலைமையிலான அரசாங்கம் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வருகிறது மற்றும் நீரிணை முழுவதும் பரிமாற்றங்களைத் தடுப்பதிலும் தைவான் மக்களின் நலன்களை சேதப்படுத்துவதிலும் “கிரிமினல் பேர்வழி என்று சென் கூறினார்.
டிபிபி அதிகாரிகளின் முக்கிய நபராகவும், தற்போதைய டிபிபி தலைவராகவும், லாய் சிங்-தே இதற்கான தனது பொறுப்பிலிருந்து தப்ப முடியாது,” என்று அவர் மேலும் கூறினார். சாய் மற்றும் லாய் ஆகியோர் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முன்வந்துள்ளனர், ஆனால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. தைவானின் மக்கள் மட்டுமே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்று டிபிபி கூறுகிறது, அதே போல் தேர்தலில் லாயின் முக்கிய எதிரியான தைவானின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான கோமின்டாங்கை (கேஎம்டி) சேர்ந்த ஹவு யூ-இஹ்.
கே.எம்.டி பாரம்பரியமாக சீனாவுடன் நெருக்கமான உறவுகளை ஆதரிக்கிறது, ஆனால் பெய்ஜிங்கிற்கு ஆதரவானது என்பதை வலுவாக மறுக்கிறது. லாய் ஒரு சுதந்திர ஆதரவாளர் என்றும் ஹௌ கண்டனம் தெரிவித்துள்ளார். தோற்கடிக்கப்பட்ட சீனக் குடியரசு அரசாங்கம் 1949 ஆம் ஆண்டில் சீன மக்கள் குடியரசை நிறுவிய மா சேதுங்கின் கம்யூனிஸ்டுகளுடனான உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த பின்னர் தைவானுக்கு தப்பியது. சீனக் குடியரசு என்பது தைவானின் அதிகாரப்பூர்வ பெயராக உள்ளது.
சீனக் குடியரசும் சீன மக்கள் குடியரசும் “ஒருவருக்கொருவர் அடிபணியவில்லை” என்று லாய் சனிக்கிழமை கூறினார், தானும் சாய்யும் முன்பு பயன்படுத்திய வார்த்தைகள் பெய்ஜிங்கையும் கோபமடையச் செய்துள்ளன என்பது தற்போது வைரலாகி வருகிறது.


