தவெக அரசுக்கு டிடிவி தினகரன் விடுத்த புதிய ‘சிபிஐ’ மிரட்டல்..!

அமமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தவெக அரசு அமைச்சர் பதவிக் கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விசிக, இடதுசாரி கட்சிகள் ஆறு மாதம் காலம் தாங்குவார்களா எனத் தெரியவில்லை. ஏனென்றால், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சியில் இருந்து ரியல் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறினார்.

அதிமுகவை ஊழல் கட்சி எனக் கூறிய விஜய் தற்போது அவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டினார். அதிமுகவை அழிக்க நினைக்கும் விஜய்க்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தருவது எந்த வகையில் நியாயம் என வினவினார்.

அமமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தவெக அரசு அமைச்சர் பதவிக் கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *