
நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லாததால் ஜவுளி தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது வியாபாரிகள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில் துறையினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.
இதனிடையில் பல தவிர்க்க முடியாத காரணங்களினால், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்திற்கும் அதிகமாக உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து செய்துவிடுகிறார்கள் வியாபாரிகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தற்போது பனியன் தொழில் நடந்து வருகிறது என்பது தான் உண்மையான நிலவரம்.
மேலும் தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளதால் தொழில்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.
அதன்படி இந்த மாதத்திற்கான (ஜனவரி) நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளனர். இதனால் திருப்பூர் ஜவுளி தொழில் துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

