Russia : எண்ணெய், எரிவாயு ஆகியவற்றிற்கு பொருளாதாரத் தடை விதித்த டிரம்ப்..!

Advertisements

ரஷ்யாவில் இருந்து ஓராண்டுக்கு எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைக் கொள்முதல் செய்துகொள்ளும் வகையில், பொருளாதாரத் தடை விதிப்பதில் இருந்து ஹங்கேரிக்கு விலக்களிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் வகையில் அதனுடன் வணிகத் தொடர்புகளை முறித்துக்கொள்ளும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதேபோலச் சீனாவையும் இந்தியாவையும் வலியுறுத்தி வருகிறார். இருப்பினும் குறைந்த விலையில் எண்ணெய்யும் எரிவாயுவும் கிடைப்பதால் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் கொள்முதலைத் தொடர்ந்து வருகின்றன.

ரஷ்யாவிடம் எண்ணெய், எரிவாயு கொள்முதல் செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அவ்வப்போது மிரட்டல் விடுத்து வருகிறார்.

அதை எந்த நாடும் கேட்காத நிலையில் ரஷ்யாவிடம் ஓராண்டுக்கு எண்ணெய் எரிவாயு கொள்முதல் செய்துகொள்ளும் வகையில் பொருளாதாரத் தடை விதிப்பதில் இருந்து ஹங்கேரிக்கு விலக்களிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *