Wrestler Rani Rana: மல்யுத்த வீராங்கனைக்கு வரதட்சணை கொடுமை!

Advertisements

Wrestler Rani Rana | Dowry Act | Harassment

வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகக் கணவர் மற்றும் மாமியார் மீது பிரபல மல்யுத்த வீராங்கனை ராணி ராணா குற்றம் சாட்டியுள்ளார்...

போபால் : மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை ராணி ராணா. இவர் பல மல்யுத்த போட்டிகளில் விளையாடிப் பதக்கங்களை வென்றுள்ளார். இவருக்குக் கடந்த 2020ஆம் ஆண்டுத் திருமணம் நடைபெற்றது. 2 வருடங்கள் கடந்த நிலையில் இவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது குவாலியர் மாவட்ட காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி வருவதாகவும், சில நேரங்களில் அடித்துத் துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் வரதட்சணை தரவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், ‘எனக்குக் கடந்த 2020ஆம் ஆண்டுத் திருமணம் நடைபெற்றது. எனது தந்தை கடன் வாங்கி எனது திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் முடிந்த 6 மாதம் வாழ்க்கை சுமுகமாகச் சென்றது. அதன் பின் எனது கணவர் மற்றும் மாமியார் கொடுமைப்படுத்த தொடங்கினர். வரதட்சணை போதவில்லையென, எனது தந்தையிடம் கேட்டு மேலும் வாங்கி வா என்று நச்சரிக்க தொடங்கினர்.

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைக் கூட அடித்துத் துன்புறுத்தாத இந்தக் காலத்தில் எனது கணவர் என்னைப் பலமுறை அடித்துத் துன்புறுத்தினார். கடைசியாக இந்த மே மாத இறுதியில் என்னை அடித்து உனக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்டார். வரதட்சணை வாங்கி வா இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேறு எனக் கூறுகின்றனர். மேலும் எனது மல்யுத்த கனவிற்கும் தடங்கலாக இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் எனக்கு அரசாங்கம் தான் உதவ வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *