Theni: மரகத லிங்கத்திற்கு சிறப்புப் பூஜை செய்து வழிபாடு!

உத்தமபாளையம் அருகேபிரம்ம ஸ்ரீகுருநாதர் மூக்கையா சுவாமிகளின்  20 ஆண்டு குருபூஜை விழாவில் ஏராளமான சிவ தொண்டர்கள் கலந்து கொண்டு மரகத லிங்கத்திற்கு சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டியில் அமைந்துள்ளது பிரம்மஸ்ரீ குருநாத மூக்கையாசுவாமிகள் தியான குடில். இங்கு  மூக்கையா சுவாமிகள் 20வதுஆண்டு  குருபூஜை நடைபெற்றது.

இவ்விழாவில் பெங்களூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மரகத லிங்கம் மாணிக்க திரிசூலம் மிகவும் பிரசித்து பெற்றது.இந்தக் குருபூஜையில் கலந்து கொள்ள தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள சிவனடியார்கள் கலந்து கொண்டு இங்கு வைக்கப்பட்டுள்ள மரகத லிங்கம் மற்றும் மாணிக்க திருசூலத்திற்கு பாலாபிஷேகம் இளநீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், மஞ்சள் நீர் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

அதன் பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிவனடியார்களுக்கும் வஸ்திர தானம் கருங்காலி மாலை தானம் கொடுத்துச் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.  இந்த அன்னதானத்தில் கலந்து கொண்ட சிவனடியார்களிடம் கைப்பிடி அன்னம் காணிக்கையாக வாங்கி சாப்பிடும் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இவர்களின் ஐதிகமாகஉள்ளது.

அதற்காகக் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இவர்களிடம் அண்ணம் காணிக்கையாக வாங்கி செல்கின்றனர் இதற்காகச் சிவ சாதுக்கள் என்று அழைக்கக்கூடிய சிவனடியார்கள் ஏராளமான கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரம்மஸ்ரீ மூக்கையா சுவாமிகள் தியான குடில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேனி மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மரகதலிங்கம் தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *