
விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. தே.மு.தி.க. விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியுள்ளது.
சென்னை: தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அப்போது தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
* மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க. அலுவலகம் வந்தார்.
* 24-ந்தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளோம். தே.மு.தி.க.வும் பங்கேற்கும்.
* திருச்சி அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் 40 தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள்.
* விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது.
* வெற்றிலை பாக்கி மாற்றி உறுதி செய்துவிட்டோம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
* ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து அறிவிப்போம்.
* நேர்காணல் நடத்தி முறைப்படி வேட்பாளர்களை தேர்வு செய்வோம்.
* தே.மு.தி.க. விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்திற்கு ரெய்டுகள் புதிதல்ல. சோதனையில் விஜயபாஸ்கர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கட்டும். சோதனை வழக்கமான ஒன்றாகவே கருதுகிறேன் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

