Odisha – Mother Thrashed: தாயாரை கட்டி வைத்து அடித்த கொடூர மகன்!

Advertisements

தனது தாயார்  தோட்டத்தில் இருந்து காலிபிளவரை பறித்ததால் மகன் ஆத்திரமடைந்த மகன், தாயாரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தை சேர்ந்தவர் சாரதா. அவரது கணவர்  இற்துவிட்டார்.  சாரதாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி சரசபசி கிராமத்திலேயே வசித்து வந்தனர். சாரதா தனது மூத்த மகன் கருணாவின் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே, மூத்த மகன் கருணா நோய் காரணமாக சமீபத்தில் உயிரிழந்து விட்டார்.

சாரதாவின் இரண்டாவது மகன் சஸ்துருகன் தனது மனைவியுடன் அதே கிராமத்தில் தனியே வசித்து வந்தார். சஸ்துருகனுக்கு கிராமத்தில் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் காலிபிளவர் பயிரிட்டுள்ளார். சாரதா அம்மா நேற்று தனது இளைய மகன் சஸ்துருகனின் தோட்டத்தில் இருந்து சமைக்க காலிபிளவர் பறித்துள்ளார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கியதோடு மட்டிமல்லாது அவரை வீட்டிற்கு அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து  தாறுமாறாக  கடுமையாக தாக்கியுள்ளார்.

சாரதா அம்மா  கூக்குரலிட்டு அழுதுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த மருமகள் தனது மாமியாரை கணவர் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பதறியுள்ளார். மேலும் தனது  மாமியாரைக் காப்பாற்ற  சென்று கணவரை தடுத்துள்ளார். அப்போது மாமியாரை காப்பாற்ற சென்ற மனைவியையும் சஸ்துருகன் தாக்கியுள்ளார்.

அதுமட்டுமல்ல ஊரே ஒன்று கூடிய நிலையில் யாரேனும் தடுத்தால் அவர்களையும் தாக்குவேன் என்று ஊர் மக்களையும் மிரட்டியுள்ளார். இறுதியில் சஸ்துருகனிடமிருந்து அவரது தாயார் மற்றும் மனைவியை ஊர் மக்கள் மீட்டனர். மகன் தாக்கியதில் படுகாயமடைந்த சாரதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மோசமான இந்த சம்பவம்  குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து , விரைந்து வந்த போலீசார் மகன் சஸ்துருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *