“எலும்ப எடுத்துக் கடிடா எளந்தாரி புள்ள… விடிஞ்சு எந்திரிச்சு நல்லா எண்ணெய் தேய்ச்சு குளிச்சிட்டு வெடக்கோழி அடிச்சி, மெதக்க மெதக்க நல்லெண்ணய ஊத்தி சுடச்சுட ஒரு சட்டி குழம்ப குடிச்சிட்டு, தூக்கம்போட்டு எந்திரிச்சம்னா, எவனடா தூக்கிப்போட்டு மிதிக்கலாம்னு இருக்கும்… அதாண்டா எளந்தாரி புள்ளைக்கு அர்த்தம்”
அசைவ உணவுகளில் அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்று சிக்கன்…
சிக்கனை கொண்டு பலவிதமான உணவுகள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாகச் சிக்கன் பிரியாணி, சிக்கன் சூப், சிக்கன் 65 போன்ற உணவுகள் அதிகம் விரும்பிச் சாப்பிடக்கூடிய உணவாக இருக்கிறது.
இதனை விரும்பிச் சாப்பிட்டால் மட்டும் போதுமா.? இதனைச் சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டாமா.!
எனவே உங்களுக்குப் பயனுள்ள வகையில் சிக்கன் சூப் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்.
எலும்புகள் வலிமையாக:

சிக்கன் எலும்புகளில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே சிக்கனில் சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ளலாம்.
தேவையற்ற கொழுப்பு குறைய:

சிக்கனில் சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைகிறது. அதாவது சூப்பில் உள்ள சிக்கனை நீக்கிவிட்டு வெறும் சாற்றினை மட்டும் அருந்த வேண்டும். இவ்வாறு சிக்கன் சூப்பை அருந்தி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைவதோடு உடலிற்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது:

சிக்கனில் உள்ள புரதங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. எனவே, சிக்கனில் சூப் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்.
தசைகள் வளர:

சிக்கனில் புரதம், அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கும் பிற திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. எனவே, தினமும் 1 கப் சிக்கன் சூப் குடிப்பதன் மூலம் தசை வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க:
தினமும் ஒரு கப் சிக்கன் சூப் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
சளி காய்ச்சல் நீங்க:

மழைக்காலத்தில் அனைவருக்கும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அந்நேரத்தில் மிளகு கொஞ்சம் தூக்கலாகப் போட்டுச் சிக்கன் சூப் செய்து சாப்பிட்டால் விரைவில் சளி மற்றும் காய்ச்சல் குணமாகும்.


