தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை – 5 பேர் கைது.! மறைந்திருக்கும் பின்னணி.!

சென்னை அடையாறு வண்ணாந்துறை ஒரு இரவு. ஒரு தவெக நிர்வாகி. ஓட ஓட விரட்டப்பட்டு சரமாரியாக வெட்டிக் கொலை. கொலை செய்யப்பட்டவர் கண்ணன். பகீரங்க கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்.

இந்தக் கொலை வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் முக்கிய காரணமாக இருக்கலாம் என்ற கோணம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதைவிட பரபரப்பான விஷயம் என்னவென்றால்…2009-ம் ஆண்டு அடையாறில் நடைபெற்ற சிவா என்ற சிவகுமார் கொலை வழக்கில் கண்ணனுக்கு தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் இப்போது போலீசார் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி. 17 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழிவாங்கத்தான் 2026-ல் கண்ணன் கொல்லப்பட்டாரா? கடந்த காலமான  2009-க்கு செல்வோம். 2009 பிப்ரவரி அன்று, இடம் சென்னை அடையாறு.

அப்போது 35 ஏ வயதுடைய சிவா என்ற சிவகுமார் ருக்மணி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். 2009 பிப்ரவரி 25-ம் தேதி இரவு சுமார் 7 மணியளவில், சிவகுமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த நால்வர் அவரை வழிமறித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த சில நிமிடங்களில், நடந்தது என்ன இருட்டில் சிவகுமார் சரமாரியாக வெட்டிக் படு கொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக போலீசார் மிக வேகமாக விசாரணை நடத்தினர். அடுத்த நாளே சிலர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.

சிவகுமார் ஏன் கொலை செய்யப்பட்டார்? இதுதான் இந்தக் கதையின் முதல் பெரிய திருப்பத்தின் பூதக் கதவு திறக்கிறது. 2009-ல் போலீசார் கூறிய ஆரம்ப விசாரணை தகவலின்படி, இந்தக் கொலைக்கு பின்னால் அரசியல் பகை அல்ல ஒரு பெண்ணைச் சுற்றிய ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் இருந்ததாக கூறப்பட்டது.

போலீஸ் விசாரணைப்படி, விக்னேஸ்வரனுக்கும், சிவகுமாருக்கும் ஒரு பெண்ணைச் சுற்றி ஏற்கனவே பிரச்சினை இருந்ததாகவும், அதன்பின்னர் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிவகுமார், விக்னேஸ்வரனை சில நாட்களுக்கு முன்பு தாக்கியதாகவும் போலீஸ் தெரிவித்தது.

அதன் தொடர்ச்சியாக பழிவாங்கும் நோக்கில் கொலை திட்டமிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.அதாவது, 2009 கொலையின் ஆரம்ப விசாரணை கோணம் – அரசியல் உள்குத்து அல்ல. தனிப்பட்ட பகை.அந்த வழக்கில் கண்ணன் எங்கே வருகிறார்? இங்கேதான் 2026 கதையுடன் 2009 கதை இணைகிறது.

2009 கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் கண்ணன் மற்றும் காவியரசன் ஆகியோர் இருந்ததாக பதிவு செய்துள்ளது. அந்த செய்தியில் கண்ணன் ஸ்ரீராமன் என குறிப்பிடப்பட்டுள்ள நபர் அப்போது அதிமுக MGR இளைஞரணி செயலாளராக  இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு 2009 செய்தியில்,  Kannan என்பவர் வண்ணாந்துறை, அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 17 ஆண்டுகள் கழித்து என்ன நடந்தது? கடந்த காலம் ஓடியது .. 2009-ல் இருந்த கண்ணன்… 2026-ல் சென்னை வண்ணாந்துறை பகுதியில் தவெக நிர்வாகியாக இருந்தார்.

செப்டம்பர் 5-ம் தேதி இரவு முதல் செப்டம்பர் 6-ம் தேதி அதிகாலை வரை நடந்த சம்பவம்தான் இப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன் மர்ம கும்பலால் விரட்டிச் செல்லப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்துக்குப் பிறகு போலீசார் CCTV காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்தனர்.

தற்போது இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்ணன் ஏன் கொல்லப்பட்டார்?இதுதான் இன்னும் முழுமையாக விடை கிடைக்காத கேள்வி. போலீசாரின் தற்போதைய விசாரணையில் முக்கியமாக இரண்டு கோணங்கள் பேசப்படுகின்றன. சிவகுமாரின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணன் குறிவைக்கப்பட்டாரா?

என்பது போலீசாரின் முக்கிய விசாரணை கோணங்களில் ஒன்றாக உள்ளது. இதுதான் இப்போது அதிகம் பேசப்படும் “பழிக்குப் பழி” தியரி.
அப்படியானால் இது தனிப்பட்ட பழியா? இதுவரை வெளியாகியுள்ள தகவல்களைப் பார்த்தால்… தனிப்பட்ட பழிவாங்கல் கோணத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருப்பதாக தெரிகிறது.

2009-ல் நடந்த சம்பவமும் தனிப்பட்ட பிரச்சினையிலிருந்து உருவானதாக போலீஸ் கூறியது. 2026 கொலையிலும் போலீஸ் முதற்கட்டமாக முன்விரோதம் இருப்பதாக சந்தேகித்துள்ளது. இரண்டு சம்பவங்களையும் இணைத்துப் பார்த்தால்…ஒரு பழைய பகை மீண்டும் உயிர்பெற்றதா?

என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அரசியல் உள்குத்து இருக்குமோ? இதுதான் மிக முக்கியமான பகுதி. கண்ணன் 2009-ல் அதிமுகவுடன் தொடர்புடையவராக இருந்ததார். 2026-ல் அவர் தவெக நிர்வாகியாக இருந்து வந்தார். இதனால் சிலர் உடனடியாக இதை அரசியல் கோணத்திலும் பார்க்க ஆரம்பித்திருக்கலாம். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் அல்லது வேறு எந்த அரசியல் கட்சியும் இந்தக் கொலையை திட்டமிட்டதாக சந்தேகமும் எழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *