திமுகவை எப்படிக் குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் தவெகவில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுதான் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு’ நிலை என்று குறிப்பிட்டுள்ளார். தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? என்று வினவியுள்ளார்..


