Advertisements

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் இன்று தொடங்குகிறது.
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி, இலங்கையில் உள்ள தம்புல்லாவில் இன்று முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. இந்நிலையில் தொடக்க நாளான இன்று, ஏ பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 11-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
Advertisements



