Kanyakumari: கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவு.. எஸ் பி அலுவலகத்துக்குப் பறந்த பெண்கள்!

Advertisements

கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்து வட்டி கும்பல்களில் தொழில் பாதிக்காமல் இருக்க கடற்கரை கிராமங்களில் இந்தக் கும்பல் சென்று அரசு வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிக் கட்ட வேண்டாமென அறிவுரை கூறிய வருவதற்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனியார் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் நாகர்கோவில் எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பு பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் தலைமையில் தனியார் சுய உதவி குழு மற்றும் தொண்டு நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அரசு வங்கிகளில் கடற்கரை கிராமங்களில் மக்களுக்குக் கடன் வாங்கிக் கொடுப்பதும் அந்தக் கடன் தொகையை மாத மாதம் வட்டியுடன் பிரித்து வங்கியில் செலுத்துவதும் இவர்களுக்கு வேலையாக இருந்து வந்தது இந்த நிலையில் அரசு வங்கிகளிலிருந்து குறைந்த வட்டிக்கு கடன் உதவிகள் கிடைப்பதால் கடற்கரை கிராம மக்கள் அதனைப் பெரிதும் பயன்படுத்தி வந்தனர். இதனால் கந்து வட்டி கும்பல்களுக்குத் தொழில் பாதிப்பு ஏற்பட்டது தங்கள் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்று கடற்கரை கிராமங்களில் வங்கிகளில் கடன் வாங்கிய மக்களிடம் சென்று கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டாமென அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இது சம்பந்தமாகக் கடன் தொகை பிரிக்கச் செல்லும் இந்தத் தனியார் சுய உதவி குழுப் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றம் சேர்ந்து நீதிமன்றம் வழிகாட்டுதலின் பெயரில் மீண்டும் எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு இதற்கு விசாரணை அதிகாரியாகக் காவல்துறை அதிகாரியாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயந்தி என்பவரை நியமனம் செய்யப்பட்டது. ஆனால் ஜெயந்தி மனு கொடுத்தவரிடம் விசாரணை நடத்தவில்லை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதும் விசாரணை நடத்தாமல் வழக்கை முடிக்க மிரட்டி வருவதாக இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் விசாரணை அதிகாரி ஜெயந்தி செயல்பட்டு வருவதாக இன்று எஸ் பி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் கூறபட்டு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *