தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த பெண் கைது!

சென்னை : 

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 3 கிலோ உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று விட்டுச் சென்னை திரும்பிய 30 வயதுடைய பெண்மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அந்தப் பெண்ணைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று பெண் அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் ரூ.2 கோடி மதிப்புள்ள 3 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். ஆப்பிரிக்காவிலிருந்து ஒருவர் கஞ்சாவை கடத்தி வந்து, தாய்லாந்தில் இவரிடம் கொடுத்ததும், பணத்துக்காகக் கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. பெண் பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *