உங்கள் ஆசைகள் எளிதில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் காணப்படும்.உங்கள் செயல் திறன் மேம்படும். பணியில் நல்ல அங்கீகாரம் பெறுவீர்கள்.உங்கள் குடும்ப நலனுக்காக நீங்கள் பணம் செலவு செய்வீர்கள். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். நிதிநிலைமை வளர்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் பணத்தை சுப காரியங்களுக்குப் பயன் படுத்துவீர்கள். இன்று சிறந்த ஆரோக்கியத்தின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ரிஷபம்
உங்கள் செயல்களைப் பொறுமையுடன் கவனமாகக் கையாள வேண்டும்.பிரார்த்தனை மற்றும் இறை மந்திரங்கள்மூலம் நன்மை விளைவதைக் காண்பீர்கள்.இன்று பணியிடத்தில் உற்சாகமான நிலை காணப்படாது. பணிகள் கடுமையாக இருக்கும். இது உங்களுக்குக் கவலையை அளிக்கும்.குடும்பத்தில் மோதல்களைத் தடுக்க கவனமுடன் தொடர்பு கொள்ள வேண்டும். உறவுமுறையில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். அதிகரிக்கும் செலவுகள் கவலையை அளிக்கும். இன்று பதட்டம் காணப்படும். தொடை அல்லது கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்
இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புத்துணர்ச்சி பெறுவீர்கள். இதன் மூலம் உங்கள் தொடர்புகள் அதிகரிக்கும்.பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சாதகமான பலன்கள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.இன்று நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று காதல் வயப்பட்ட நிலையில் இருப்பீர்கள். இந்த மனநிலையை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.உங்கள் வங்கியிருப்பைக் கொண்டு உங்கள் தேவையை நிறைவேற்றுவீர்கள்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும்.
கடகம்
இன்று எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். மனம் திறந்து அந்த வாய்ப்புகளை எற்றுக் கொள்ளுங்கள். பணியில் பதட்டம் உங்களுக்குக் கவலையை ஏற்படுத்தும். விளைவுகள் உங்களுக்குத் திருப்தி அளிக்காது. குடும்பத்தில் விவாதங்கள் ஏற்படலாம். சிறிது அனுசரித்துப் போவதன் மூலம் அமைதியும் ஸ்திரத்தன்மையும் காணப்படும்.நிதி ஏற்றத் தாழ்வு உங்களுக்குக் கவலையை உண்டாக்கும். பண இழப்பு ஏற்படாமல் இருக்க நீங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.தொடை மற்றும் கால் வலி ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம் மேற்கொள்ளவும்.
சிம்மம்
இன்று சில மாறுதல்கள் ஏற்படும். பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.உங்கள் மனதில் பணி மாற்றம்குறித்த எண்ணங்கள் எழும். பயணங்கள் அவசியம் காணப்படும். இதனால் பதட்டம் ஏற்படும். அனுசரித்து போவதன் மூலம் உறவில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும்.நிதி நிலைமை மகிழ்சிகரமாக இருக்காது. இன்று அதிக செலவுகளைச் சந்திக்க நேரும்.தொடை மற்றும் கால் வலி ஏற்படலாம். உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று சிறந்த பலன்கள் விளையும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் வளர்ச்சியும் உங்கள வாழ்வில் நன்மையும் விளையும்.பணியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் பணிகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் நிலவும். உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள்.நிதி வளர்ச்சி அபாரமாக இருக்கும். நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
துலாம்
வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் சாதகமான பலன் கிடைக்கும். இதனை உண்மையாக நீங்கள் முயற்சி எடுக்கலாம்.பணியிடத்தில் விளைவுகள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். நீங்கள் சிறப்புடன் வளர்ச்சி காண்பீர்கள்.உங்கள் குடும்ப நண்பர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். உங்கள் இனிமையான தொடர்பாடல் அவரை ஈர்க்கும்.நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும்.இன்று மகிழ்ச்சியான மனநிலை காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
விருச்சிகம்
இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். ஆன்மீக ஈடுபாடு நன்மை அளிக்கும்.பணியிடத்தில் சிறப்பான பலன்கள் கிடைகாது. பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாகக் கையாள வேண்டும்.இன்று உறவில் மகிழ்ச்சி நிலவும் வகையில் உற்சாகமான நாளாக இருக்காது. உரையாடலைத் தொடங்குமுன் நன்கு யோசிக்கவும்.உங்கள் குடும்பத்திற்காக அதிக பணம் செலவு செய்வீர்கள். இதனால் சேமிப்பிற்கான வாய்ப்பு குறையும்.தூக்கமின்மை காரணமாக உடல் வலி காணப்படும். தோல் எரிச்சலும் இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.
தனுசு
ஆன்மீக இசையைக் கேட்பதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.பணிகளைக் கையாளும்போது கவனக்குறைவு ஏற்படும். சக பணியாளர்களுடன் மோதுவதை தவிர்க்கவும்.உறவு பொறுத்த விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்காது. உங்கள் உடன் பிறந்தோருடன் கருத்து வேறுபாடு காணப்படும்.நிதி வளர்ச்சி மகிழ்சிகரமாக இருக்காது. பெரிய முதலீடுகள் தவிர்ப்பது நல்லது. சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு.உங்கள் தாய்க்கு உடல் நலக் குறைபாடு காணப்படும். அவரின் ஆரோக்கியத்திற்காகப் பணம் செலவு செய்ய நேரும்.
மகரம்
நீங்கள் அமைதியாக இருக்க கேளிக்கை நிகழ்ச்சி களைக் கண்டு மகிழுங்கள். உங்கள் அன்றாட செயல்களில் கவனம் செலுத்துங்கள்.வேலை தொடர்பான பயணம் காணப்படும். என்றாலும் உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.குடும்ப வளர்ச்சிக்கு இது உகந்த நாள் அல்ல. அனுசரித்து போவதன் மூலம் தான் நல்லிணக்கம் ஏற்படும்.இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. குடும்ப பொறுப்புகள் காரணமாகக் கூடுதல் செலவுகள் ஏற்படும்.உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண் எரிச்சல் அல்லது பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
இன்று உற்சாகமான மாறுதல்களைக் காண்பீர்கள். இனிமையான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள இன்றைய நாளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை மற்றும் தரம் உயரும்.உறவினர்களின் வருகை உற்சாகம் அளிக்கும். நீங்கள் அவருடன் தரமான நேரத்தைப் பகிர்ந்து கொள்வீர்கள்.பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். நிதியின் ஸ்திரத்தன்மைக்கு இன்றைய தினத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
உங்கள் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும்.பணி மாற்றம் அல்லது இட மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் தற்போதைய பணியில் உங்களுக்குத் திருப்தி காணப்படாது. உங்கள் துணையுடன் உற்சாகமான நிலை அல்லது மகிழ்ச்சியான நிலை காணப்படாது. நீங்கள் முடிவுகள் எடுப்பதை கடினமாக உணர்வீர்கள்.நிதி நிலைமை எதிர்பார்த்த அளவிற்கு காணப்படாது. பண இழப்பு ஏற்படாமல் இருக்க பணத்தை சாதுர்யமாகக் கையாளவும்.ஆரோக்கியம் ஸ்திரமாக இருக்காது. நீங்கள் தூக்கப் பிரச்சினையால் அவதிப்படுவீர்கள்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.