மூன்றாம் முறை வென்ற தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு!

மும்பை: 

மஹாராஷ்டிரா மாநிலம் சட்டசபை தேர்தலில், மூன்றாம் முறை வென்ற தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்செல்வன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 7,895 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே இந்தத் தொகுதியில் 2014, 2019ம் ஆண்டுப் பா.ஜ.க, சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தற்போது அவர் 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். மூன்றாம் முறை வென்ற தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. தமிழரான, இவர் 3 முறை எம்.எல்.ஏ., ஆனது அங்கு வசிக்கும் தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்செல்வன் மஹா., வில் வார்டு கவுன்சிலராக இருந்து எம்.எல்.ஏ., வானவர்.

* இவர் 1980ம் ஆண்டு காலத்தில் துபாய்க்கு வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டு, மும்பை ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டார். இவர் அங்குக் கூலி தொழிலாளராகப் பணியாற்றி உள்ளார்.

* இவரது தாய் மற்றும் தம்பி புதுக்கோட்டையில் தான் வசித்து வருகின்றனர்.

*2008ம் ஆண்டு மும்பை விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, களத்தில் இறங்கி, 36 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.

* இவர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியை உள்ளடக்கிய சியோன்- கோலிவாடா தொகுதியிலிருந்து 3 முறை எம்.எல்.ஏ., வாக மஹா., சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

* இவரை மக்கள் பெயர் சொல்லி அழைப்பதை விட, கேப்டன் என்று அன்பாக அழைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *