Winston Churchill: உலக தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த தினம்..

Advertisements

வின்ஸ்டன் சர்ச்சில்  சிறந்த அரசியல்வாதியும்  இங்கிலாந்தின் முன்னாள் பிரதம மந்திரியும் ஆவார்.

வின்ஸ்டன் லியோனார்டு ஸ்பென்சர் சர்ச்சில் ஒரு உயர்குடியில் நவம்பர் 30- ஆம் தேதி 1874 -ஆம் ஆண்டு பிறந்தார். சர்ச்சிலின் தந்தை ரண்டால்ஃப் சர்ச்சில்,  புகழ் பெற்ற அரசியல் தலைவர்.

தாயார் அமெரிக்க உயர் குடியைச் சேர்ந்தவர். சர்ச்சில் இளம் வயதில் அவருடைய பாட்டி எலிசபெத் ஆனி எவரெஸ்ட்டின் அரவணைப்பில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை ஹாரோ பள்ளியில் முடித்து இங்கிலாந்து ராயல்  ராணுவ பள்ளியில் சேர்ந்து படித்தார். பயிற்சி முடித்து ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றி பல விருதுகளைப் பெற்றார்.

ராணுவத்தில் பணிபுரிந்த சர்ச்சில் பிறகு அரசியலில் இருந்த ஆர்வத்தின் காரணமாக அரசியலில் ஈடுபட்டார்.  சர்ச்சில் தன்னை ஒரு சிறந்த அரசியல்வாதியாக  செதுக்கிக் கொண்டார். அதன் பலனாக மிக விரைவிலேயே இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக ஒரு முறை அல்ல இரண்டு முறை பதவியேற்றுச் சிறப்புற ஆட்சி செய்தார்   என்பது  குறிப்பிடத்தக்கது. 1940-ஆம் ஆண்டு முதல் 1945 வரையிலும், மீண்டும் 1951 முதல் 1955- ஆம் ஆண்டு வரையிலும் பிரதம மந்திரியாகப் பதவி வகித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *