Police Raid: ரவுடிகள் வீடுகளில் அதிரடி சோதனை!

புதுச்சேரி, வில்லியனுார் அம்மா நகரில் மேற்கு பகுதி பயிற்சி ஐ.பி.எஸ், அதிகாரி தலைமையில் போலீசார் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் வீடுகளில் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சீனியர் எஸ்.பி., உத்தரவின் பேரில் மேற்கு பகுதி எஸ்.பி., பயிற்சி ஐ.பி.எஸ்., அதிகாரி வைபோமீனா தலைமையில் வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் குமார் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் மற்றும் கிரைம் போலீஸ் என 50க்கும் மேற்பட்டோர் வில்லியனுாரில் கஞ்சா மற்றும் ரவுடிகளின் கூடாரமாக உள்ள அம்மா நகர், நடராஜன் நகர் உள்ளிட்ட பகுதியில் குற்றப் பதிவேடு உள்ளவர்கள்,

குற்றப்பின்னனி உடையவர்கள், சமீப காலத்தில் நிறைய குற்ற வழக்குகளில் சிக்கி உள்ள ரவுடிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுடைய நடவடிக்கைகள், என்ன வேலை செய்கிறார்கள், யாரோடு தொடர்பில் உள்ளனர், வீட்டில் கஞ்சா மற்றும் வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளார்களா எனச் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் கோபாலன்கடை, ஜி.என் பாளையம், கணுவாப்பேட்டை, புதுநகர், ஒத்தவாடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது சந்தேகத்தின் பேரில் இரு ரவுடிகளை விசாரணைக்காகப் பிடித்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *