Shenbagathoppu: செண்பகமே செண்பகமே..தேடி ஓடும் நம் மனமே!

Advertisements

ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள  செண்பக தோப்பு. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.  பச்சைப் பசேலெனப் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். எங்குத் திரும்பினாலும்  பசுமை தான். இந்த இடம் சுற்றுலாத் தலமாகும்.

 

 

இந்த வனப்பகுதியில் ஆங்காங்கே ஆங்காங்கே சிற்றோடைகள் ஓடுவதால் மகிழ்ச்சியாக குளித்து விளையாடலாம்.  பேச்சியம்மன் கோயில் ஓடை, மீன்வெட்டி அருவி மிகவும் மக்களால் விரும்பபடும் இடமாகும்.

 

சிறப்பு என்னவெனில் சாம்பல் நிற அணில் சரணாலயமாக இருந்தது.  இந்தப் பகுதியில்  மேகமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது.  மலையும் சூழ்ந்துள்ளதால் ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் செல்ல நல்ல வாய்ப்பாக  இருக்கிறது.

 

விருதுநகர் மாவட்டத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும் அங்கிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் வர வேண்டும். அங்கிருந்து காலை மற்றும் மாலையில் செண்பக தோப்பிற்கு பேருந்து வசதி உள்ளது. ட்ரக்கிங் அனுபவம் வேண்டும் என்பவர்கள் தாரளமாகச் செண்பக தோப்பு போகலாம். 200 ரூபாய் இருந்தால் போதும் , இன்பச் சுற்றுலா செல்லலாம்.

பசுமை புல்வெளிகள், நீர் வீழ்ச்சிகள் , சிறு சிறு நீரோடைகள், குன்றுகள், மலைகள். எங்கு வேண்டுமானாலும் ஓடி விளையாடலாம். அமைவருக்கும் ஏற்றச் சுற்றுலாத் தலமாகும். ஒரு முறை சுற்றுலா சென்று வாருங்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *