பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்த இஸ்ரேல் ஒப்புதல்.!

Advertisements

பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை விரிவுபடுத்த இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாலஸ்தீன நாட்டின் முக்கியப் பகுதியான மேற்கு கரை 1967 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கு பூர்வீமாக உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றும் நோக்கில் இஸ்ரேல் மக்களின் திட்டமிட்ட குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மேலும் விரிவுபடுத்த இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக, இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசியபோது,  இஸ்ரேலிய மண்ணில் தங்களது நடவடிக்கை வேர்களை ஆழமாக்கும் என்றும் பாலஸ்தீன நாடு என்ற கருத்தாக்கத்தைப் சிதைக்கும் என்றும் தெரிவித்தனர்.

மேற்குக்கரை இஸ்ரேலின் இதயம் போன்றது என்றும் குறிப்பிட்டனர். இந்த நடவடிக்கை மேற்குக்கரையை இஸ்ரேலுடன் முழுமையாக இணைத்துக்கொள்ளும் முயற்சி என பாலஸ்தீன நிர்வாகம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *