T20 World Cup : கனடாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி.!

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கனடாவை வீழ்த்தி  தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா – கனடா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற கனடா அணி பந்து வீச்சை தெர்வு செய்தது.

இதன்படி, முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. மிகவும், சிறப்பாக விளையாடிய கேப்டன் மார்க்கிராம் 59 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 214 அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கனடா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 57 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *