BJP Hunger Strike: பா.ஜ.க. உண்ணாவிரதம் போராட்டம்!

Advertisements

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்திப் பா.ஜ.க. உண்ணாவிரதம் போராட்டம்!

சென்னை: காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரும் 16ம் தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்துள்ளார்.

பா.ஜ.க. மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அடையாள போராட்டம் நடைபெறும் எனத் தமிழக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *