இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்?

இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

திரையரங்கு சென்று படங்கள் பார்க்கும் ரசிகர்களுக்கு இணையாக ஓடிடியிலும் படங்கள் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஓடிடி தளங்களுக்கென்றே பிரத்யேக இணைய தொடர்கள், படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. திரையரங்குகளில் வெளியான படங்களும் ஒரு மாதம் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகிறது என்பதைப் பார்க்கலாம். பாலிவுட்டில் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரஷாந்த் நடித்திருந்தார். இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

தீபாவளிக்கு ரிலீஸான ஜெயம் ரவி, பிரியங்கா மோகனின் ‘பிரதர்’ படம் ஜீத்தமிழ் ஓடிடி தளத்திலும் கவினின் ‘ப்ளெடி பெக்கர்’ அமேசான் பிரைம் ஓடிடியிலும் இந்த வாரம் வெளியாகிறது.

அதே போன்று தீபாவளி ரிலீஸான நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. இவை தவிர்த்து ‘பாராசூட்’ இணையத் தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடியிலும், விகடவி வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்திலும் நாளை வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *