தமிழகத்தில் மோடிக்கு வெற்றி என்பதே கிடையாது – ரகுபதி பேச்சு.!

2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்றுவிடலாம் என பிரதமர் மோடி கனவு கொண்டுள்ளதாக கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முட்டாள் தனமான கருத்தைக் கூறி வருவதாகவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி போதிய அவகாசம் இன்றி அவசரகதியில் நடந்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.

வாக்குகள் திருடப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக திமுகவினரும் களத்தில் உள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்றுவிடலாம் என பிரதமர் மோடி கனவு கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திமுக கூட்டணி வலுமையாக உள்ளது என்றும் திமுகவை வெல்லும் சக்தி இந்தியாவில் கிடையாது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *