
பொதுவாக, மாதுளையிலிருந்து விதைகளை நீக்கியபின், தோலை குப்பையில் வீசுவார்கள். ஆனால் மாதுளை விதைகள் மட்டுமின்றி அதன் தோலிலும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
பொதுவாக, மாதுளையிலிருந்து விதைகளை நீக்கியபின், தோலை குப்பையில் வீசுவார்கள். ஆனால், மாதுளை விதைகள் மட்டுமின்றி அதன் தோலிலும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?.
ஆயுர்வேதத்தின் படி, மாதுளை தோல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியம் மற்றும் அழகைப் பராமரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதுளை பழத்தோலின் நன்மைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
ப்ரோடீன்கள், வைட்டமின்கள், கால்சியம், மினெரல்கள், ஃபிளாவனாய்டுகள், டானின்கள், பொட்டாசியம், பாலிபினால்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் ஆகியவை மாதுளை தோலில் காணப்படுகின்றன.
இது தவிர ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகளும் மாதுளை தோலில் உள்ளன. அவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அழிப்பதன் மூலம் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்-ஐயும், வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றது.
இதுதவிர சளி மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணமும் அளிக்கிறது.
மாதுளை விதைகளைத் தவிர, அதன் தோலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது பல்வேறு உடல்நலம் மற்றும் அழகு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது. மாதுளை தோலை காயவைத்து பொடியாக்கி பல வழிகளில் பயன்படுத்தலாம். இது எடை இழப்புக்கும் உதவுகிறது.
இதயம் மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
