விஜய் தேவரகொண்டா புதிய படத்தில் மமிதா பைஜு!

Advertisements

விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை:தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாகப் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைக் கவுதம் தினனுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னதாக இப்படத்தில் கதாநாயகியா நடிக்க ஸ்ரீலீலா ஒப்பந்தமானார். பின்னர் சில தனிப்பட்ட காரணங்களுக்காகப் படத்திலிருந்து விலகினார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகைகுறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கப் பிரேமலு படத்தில் நடித்த மமிதா பைஜு மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *