அண்ணாமலைக்கு ‘சனி’ கடக்க போகுது..இனி எல்லாம் ஜெயமே .!

Advertisements

சட்டசபை தேர்தலில் களமிறங்க தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை போட்டியிட தேர்வு செய்த தொகுதிகளில் எதையும், தே.ஜ., கூட்டணியிலுள்ள பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., ஒதுக்கவில்லை. எனினும், கொங்கு மண்டலத்தில் கிடைத்திருக்கும் ஏதேனும் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிடுமாறு, அவரது ஆதரவாளர்கள் அண்ணாமலையை வலியுறுத்தி கொணடிருக்கின்றனர்.

ஆனால், அண்ணாமலை மவுனம் காத்து வருகிறார். இதுவரை, பாரதிய ஜனதா கட்சியும் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கவில்லை.ஆனால், அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமாகவர்கள் கூறுகிறார்கள். அண்ணாமலையின் முடிவின் பின்னணியில் ஜோதிடர் ஒருவர் இருக்கிறாராம்.

அண்ணாமலை ஜாதகப்படி, அரசியலில் நுழைந்து  நான்கு ஆண்டுகள், அவருக்கு வளர்ச்சியே இருக்காது; தொட்ட காரியம் எல்லாம் சிக்கலிலேயே முடியும்; கட்டங்கள் சரியில்லாததால் தான், கடந்த லோக்சபா தேர்தலில், வலுக்கட்டாயமாக போட்டியிட வைக்கப்பட்டு தோற்றார்; தமிழக பா.ஜ., தலைவர் பதவியையும் இழந்தார்’ என, அந்த ஜோதிடர் கூறியுள்ளராம்.

அதன்படி, அண்ணாமலைக்கு கடந்த நான்கு ஆண்டுகள் பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. தற்போது, நான்காம் ஆண்டின் தொடக்கத்தில் இருப்பதால், தன் ஆஸ்தான ஜோதிடரான பெங்களூரில் உள்ள திருவண்ணாமலை நாடி ஜோதிடரை, சில நாள்களுக்கு முன் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அந்த ஜோதிடர், ‘இன்னும் ஓராண்டுக்கு ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மோசமான காலகட்டத்தில் வலுக்கட்டாயமாக எடுக்கும் முடிவு பெரிய ஆபத்தை தரும். சரியான தொகுதி கிடைக்காமல், போட்டியிட்டு மூன்றாவது முறையும் தோற்றால், அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். நல்ல காலம் பிறக்கும் வரை தேர்தலில் போட்டியிட வேண்டாம்.

உங்களின் எதிரிகள் வீழும் நேரம் இது. எனவே பொறுமையாக இருங்கள்’ என, அண்ணாமலையிடம் திட்டவட்டமாக  கூறி விட்டாராம். ஜோதிடரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவில் அண்ணாமலை இருக்கிறார்.அதேநேரம், ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டே ஆக வேண்டும் என கட்சி மேலிடம் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது என்கின்றனர் பா.ஜ.,வினர்.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 29ம் தேதி கேரளாவில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக,  டெல்லியில் இருந்து பிற்பகல் 2 மணியளவில் பிரதமர் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் , இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

பின்னர் , ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு கிளம்பிச் சென்றார்.  பிரதமர் கோவை வந்த போது, மார்ச் 29ம் தேதி அண்ணாமலை கோவையிலுள்ள வீட்டில்தான் இருந்தார். அப்படியிருந்தும், பிரதமர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை. பிரதமரை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் இது குறித்து  கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “நான் வந்தவுடன் அண்ணாமலை எப்பொழுது வருகிறார் என கேட்டேன். பிரதமரை வரவேற்கும் லிஸ்டில் அவரது பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் தான் வரவில்லை என்று சொன்னார்கள் . இது பற்றி அண்ணாமலையிடம் கேட்கிறேன் ”என்று பதில் கூறினார். இதுவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைமை மீது அண்ணாமலை கடும் அதிருப்தியில்இருப்பதேயே காட்டுவதாகவும், அதனால் பிரதமரையே புறக்கணிக்கும் மனநிலைக்கு வந்து விட்டதாகவும் கூறுகிறார்கள்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் ஆசை அண்ணாமலைக்கு இருந்ததாம். ஆனால்,தெற்கு தொகுதி பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. அதிமுகவின் அம்மன் கே. அர்ச்சுனன் இங்கு போட்டியிடுகிறார். இப்போது, செந்தில் பாலாஜி இங்கு களம் காண்கிறார். அம்மன் கே. அர்ச்சுனன் இடத்தில் அண்ணாமலை இருந்திருந்தால், கோவை தெற்கு தொகுதியின் நிலைமை வேறு மாதிரியாக ஆகியிருக்கும். அதேபோல, தனது ஆதரவாளர்களுக்கு கோவை சுற்று வட்டாரத்தில் இரு தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென்றும் அண்ணாமலை ஆசைப்பட்டாராம்.

ஆனால், இது எதுவுமே நடக்கவில்லை. அவரது கூட்டணியிலுள்ள மூத்தத் தலைவர்கள் அனைவருமே அண்ணாமலைக்கு எதிராக ஒன்று சேர்ந்து  கோஷ்டியாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஜோதிடரை சந்தித்து விட்டு வந்த பிறகு, சென்னையில் பாஜக பொறுப்பாளர் பியூஸ் கோயலைச் சந்தித்த அண்ணாமலை, ஒரு பாஜக தொண்டராக தனக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும் வேலை செய்ய தயார் என்று கூறிவிட்டாராம்.

ஆனால், தற்போது நடிகர் விஜய் கட்சித் தொடங்கி இளைஞர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார். அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த போது, இளைஞர்களின் விருப்பத்துக்குரியத் தலைவராகவும் இருந்தார். ஓட்டு வங்கியும் பெருகியது . இப்போது, விஜய் பக்கம் போய் கொண்டிருக்கும் இளைய தலைமுறையை மீண்டும் பாஜக பக்கம் திருப்ப வேண்டுமென்றால் நிச்சயமாக அண்ணாமலை என்ற முகம் பாஜகவுக்கு தேவை.

இதை, புரிந்து கொண்டு டெல்லி தலைமை செயல்பட வேண்டுமென்பதே பாஜக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *