Weather News : 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *