“தொலைந்த எனது மகிழ்ச்சியை ஸ்டாலின் எனக்கு தந்துள்ளார்”- ஓபிஎஸ்

Advertisements

ஜெயலலிதா மறைந்ததால் தொலைந்த மகிழ்ச்சியை திமுகவில் இணைந்தபிறகு திரும்ப பெற்றுவிட்டதாக முன்னாள் முதலமைச்சரும், சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்ச்செல்வம் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி வரை தன்னுடைய மகிழ்ச்சி தொலைந்துவிட்டதாகவும், திமுகவில் தன்னை இணைத்து அந்த மகிழ்ச்சியை முதலமைச்சர் மு.க, ஸ்டாலின் திரும்ப கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சரானதும் எடப்பாடி பழனிசாமி நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டதாகவும் அதேநேரம், ஜெயலலிதா தனக்குக் கொடுத்த முதலமைச்சர் பதவியை அவருக்குத் திரும்ப கொடுத்து விட்டதாகவும் ஓபிஎஸ் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜா, ஓ.பி. ரவீந்திரநாத் மற்றும் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *